.'' இவ்வுலகில் வாழ்ந்த தெய்வம் அன்னை தெரேசா பற்றி தொகுப்பு '' அனைவரும் படிக்கவேண்டியது , நன்பர் ஒருவர் தொகுத்தது உங்களுக்காக .
அன்னை தெரேசா (ஆகஸ்டு 26, 1910 -
செப்டம்பர் 5, 1997), ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ எனும் இயற்பெயருடன் அல்பே...னியா
நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டு இந்திய குடியுரிமை பெற்ற ரோமன் கத்தோலிக்க
அருட்சகோதரிஆவார். 1950 ஆம் ஆண்டு, இந்தியாவின்கொல்காத்தாவில்(கல்கத்தா)
மிஷினரீஸ் ஆப் சேரிட்டி என்ற அமைப்பைத் தோற்றுவித்தவர் இவர். நாற்பத்தைந்து
வருடங்களுக்கு மேலாக அவர் ஏழைஎளியோர்களுக்கும், நோய்வாய்ப்பட்டோருக்கும்,
அனாதைகளுக்கும், இறக்கும் தருவாயிலிருப்போர்களுக்கும் தொண்டாற்றிக் கொண்டே,
முதலில் இந்தியா முழுவதும் பின்னர் ஏனைய வெளிநாடுகளுக்கும் மிஷினரீஸ் ஆப்
சேரிட்டி-யை விஸ்தரித்தவர். 1970 களுக்குள் இவர் சிறந்த பரோபகாரி எனவும்
ஏழைகளுக்கும், ஆதரவற்றோருக்கும் பரிந்து பேசுபவர் என்று உலகம் முழுவதும்
புகழப்பட மேல்கம் முக்கெரிட்ஜ் -ன் சம்திங்க் பியுடிஃபுல் ஃபார் காட் என்ற
விளக்கப்படமும் ஒரு காரணமாகும். இவர் 1979-ல் அமைதிக்கான நோபல் பரிசும்,
1980-ல் மனிதநேய பணிகளுக்காக இந்தியாவின் சிறந்த குடிமக்கள் விருதான பாரத
ரத்னாவும் பெற்றார். அன்னை தெரேசாவின் பிறர் அன்பின் பணியாளர் சபை விரிந்து
கொண்டே சென்று, அவரது மரணத்தின் போது 123 நாடுகளின் 610 தொண்டு
நிறுவனங்களை இயக்கிக்கொண்டிருந்தது. இதில் எச் ஐ வி/எய்ட்ஸ்,தொழு நோய்
மற்றும் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நல்வாழ்வு மையங்கள் மற்றும்
இல்லங்கள், இலவச உணவு வழங்குமிடங்கள், குழந்தைகள் மற்றும்
குடும்பத்தினருக்கான ஆலோசனைத் திட்டங்கள், அனாதை இல்லங்கள் மற்றும்
பள்ளிக்கூடங்களும் அடங்கும். பல்வேறு நபர்கள், அரசுகள் மற்றும் அமைப்புகள்
இவரை புகழ்ந்து வந்திருக்கின்றன. எனினும் பலவிதமான விமர்சனங்களையும் இவர்
சந்தித்துள்ளார்.இத்தகைய விமர்சனங்கள் கிறிஸ்டோபர் ஹிச்சன்ஸ், மைக்கேல்
பேரன்டி, அரூப் சட்டச்சர்ஜி போன்ற நபர்களாலும் விஸ்வ ஹிந்து பரிஷத் போன்ற
அமைப்புகளாலும் அவரது உறுதியான கருக்கலைப்பு எதிர்ப்பு நிலையையும், ஏழ்மை
தரும் ஆன்மீக மேன்மையின் மீது அவர் கொண்டிருந்த நம்பிக்கையையும், இறப்பின்
வாயிலிலிருப்போருக்கு அவர் ஞானஸ்நானம் அளிக்கிறார் என்ற
குற்றச்சாட்டினையும், மதமாற்றத்தைக்குறிக்கோளாகக் கொண்ட அவரது யுத்திகளாகக்
கருதி எழுப்பப்பட்ட ஆட்சேபனைகளாகும். பல மருத்துவப் பத்திரிகைகள், அவரது
நல்வாழ்வு மையங்களின் மருத்துவ வசதித் தரத்தைப் பற்றி விமர்சிப்பனவாகவும்,
நன்கொடைப் பணம் செலவு செய்யப்படுவதின் விதத்தைப் பற்றிக் கவலை எழுப்பிய
வண்ணமும் இருந்தன.
[1]மரணத்திற்குப் பின் திருத்தந்தை இரண்டாம் அருள்
சின்னப்பர்-ஆல் முக்திபேறு அடைந்தவராக அறிவிக்கப்பட்டு கொல்கத்தாவின்

[2]அருளாளர் தெரேசா என்ற பட்டம் சூட்டப்பட்டார்

[3]ஆக்னஸ் கோன்ஜா
போஜாஜியூ (கோன்ஜா என்பதற்கு அல்பேனிய மொழியில் "ரோஜா அரும்பு" என்று
பொருள்) ஆகஸ்டு 26,1910 ல் ஒட்டோமன் சாம்ராஜ்யத்தின் அஸ்கப் (தற்போது
மேசிடோனியக் குடியரசின் ஸ்கோப்ஜி)இல் பிறந்தார். ஆகஸ்டு 26 ஆம் தேதி பிறந்த
போதிலும், அவர் திரு முழுக்குப் பெற்ற ஆகஸ்டு 27 ஆம் தேதியையே தனது
உண்மைப் பிறந்தநாளாகக் கருதினார்.
[4] அல்பேனியாவின் ஷ்கோடரில் வாழ்ந்து
வந்த குடும்பமான நிக்கல் மற்றும் டிரானா போஜாக்சியுவின் குழந்தைகளில்
இளையவர் இவர்.
[5] அவரது தந்தை அல்பேனிய அரசியலில் ஈடுபட்டிருந்தார். 1919
இல், ஸ்கோப்ஜி அல்பேனியாவிற்கு வெளியே தள்ளப்பட்ட ஒரு அரசியல்
கூட்டத்திற்குப் பிறகு அவர் நோய்வாய்ப்பட்டு ஆக்னஸுக்கு எட்டு
வயதாயிருக்கும் போது காலமானார்.அவரது மரணத்திற்குப் பின், அவரது தாயார்
அவரை ரோமன் கத்தோலிக்கராக வளர்த்து வந்தார்.
[6]ஜோன் கிராப் க்ளூகாஸின்
வாழ்க்கை வரலாற்றின் படி குழந்தைப் பருவத்தில் ஆக்னஸ் மதபோதகர்களாலும்
அவர்களது சேவைகளாலும் ஈர்க்கப்பட்டு பன்னிரண்டு வயதுக்குள் தெய்வ
நம்பிக்கையுள்ள ஒரு வாழ்க்கைக்கு தன்னை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும்
என்று தீர்மானித்துக் கொண்டார்.
[7] தனது பதினெட்டாம் வயதில் அவர் வீட்டை
விட்டு வெளியேறி,லொரேட்டோ சகோதரிகளின் சபையில் மத பிரசாரகராக தன்னை
இணைத்துக் கொண்டார்.அதற்குப் பிறகு தனது தாயையோ அல்லது உடன்பிறந்த
சகோதரியையோ மீண்டும் பார்த்தாரிலர்.
[8]இந்தியாவின் பள்ளிக்குழந்தைகளுக்கு
கற்றுக்கொடுக்க லொரேட்டோ சகோதரிகள் பிரயோகிக்கும் மொழியான ஆங்கிலத்தைக்
கற்பதற்காக,அயர்லாந்தின் ரத்ஃபர்ன்ஹாமில் உள்ள லொரேட்டோ கன்னியர்
மடத்திற்கு முதலில் சென்றார் ஆக்னஸ்.
[9] 1929 ஆம் வருடம் அவர் இந்தியாவை
வந்தடைந்து இமய மலை அருகே உள்ள டார்ஜீலிங்கில் தனது கன்னியர் மட பயிற்சியை
ஆரம்பித்தார்.
[10] கன்னிகாஸ்திரிகளுக்கான முதன்மை மத பிரமாணங்களை அவர் மே
24,1931 இல் எடுத்துக்கொண்டார்.
[11]அவ்வமயம் மதபிரசாரகர்களின் காவல் புனிதரான
தெரேசா டி லிசியுவின் பெயரைத் தனக்குத் தெரேசா எனத் தேர்ந்தெடுத்துக்
கொண்டார்.

[12] கிழக்குக் கல்கத்தாவின் லொரேட்டோ கன்னிமடப் பள்ளியில்
தனது அர்ப்பணிப்பு பிரமாணங்களை 1937 மே 14 ஆம் தேதி எடுத்துக் கொண்டார்.
[13]
[14]பள்ளிக்கூடத்தில் பயிற்றுவிப்பதை தெரேசா விரும்பினாலும்
கல்கத்தாவில் அவரைச் சூழ்ந்துள்ள பகுதிகளின் வறுமை நிலை அவரை அதிகமதிகமாய்
கலங்கச் செய்தது.
[15] 1943-ன் பஞ்சம், துயரத்தையும் சாவையும்
அந்நகரத்துக்குக் கொணர்ந்தது என்றால் 1946-ன் இந்து/முஸ்லிம் வன்முறை
அந்நகரத்தை நம்பிக்கையின்மையிலும் அச்சத்திலும் ஆழ்த்தியது.
[16 ]
மிஷினரீஸ் ஆப் சேரிட்டி செப்டம்பர் 10,1946 இல் வருடாந்திர தியானத்திற்காக
கல்கத்தாவிலிருந்து, டார்ஜீலிங்கின் லொரேட்டோ கன்னிமடத்திற்கு தெரேசா
பயணம் மேற்கொண்டிருந்த பொழுது அவருக்கு நேர்ந்த உணர்வு பின்னர் அவர் அதனை
"அழைப்பினுள் நேர்ந்த அழைப்பு" என வர்ணிக்க வைத்தது. "நான் கன்னிமடத்தை
விட்டு வெளியேறி, ஏழைகள் மத்தியில் வாழ்ந்து கொண்டே அவர்களுக்கு உதவ
வேண்டும். அது ஒரு கட்டளை. தவறுவது விசுவாசத்தை மறுதலிப்பதற்கு ஒப்பானது."

[17] 1948 இல் ஏழைகளுடனான தனது ஊழியத்தை ஆரம்பித்தார் அவர். பாரம்பரிய
லொரேட்டோவின் அங்கியைக் களைந்து, நீல கரையிடப்பட்ட சாதாரண வெண்ணிற பருத்தி
புடவையை அணிந்தவராய், இந்திய குடியுரிமைப் பெற்றுக்கொண்டு குடிசை
பகுதிகளுக்குள் நடமாடினார்.
[18][19] தொடக்கத்தில் மோதிஜில்லில்
பள்ளிக்கூடம் ஆரம்பித்த அவர் பின்னர் ஆதரவற்றோர், பட்டினியால் வாடுவோர்
போன்றவர்களின் தேவைகளை நிறைவேற்றத் தொடங்கினார்.

[20] அவரது முயற்சிகள்
விரைவிலேயே பிரதம மந்திரி உட்பட இந்தியாவின் உயர் அதிகாரிகளின் கவனத்தை
அவர் பக்கம் ஈர்த்து அவர்களது பாராட்டுதலைப் பெற்றுத்தந்தன.
[21]தெரேசா
தனது நாட்குறிப்பில், தனது முதல் வருடம் கஷ்டங்கள் நிறைந்ததென்றும்,
வருமானமில்லாத காரணத்தால் உணவுக்காகவும்,ஏனைய பொருட்களுக்காகவும் யாசிக்க
நேர்ந்ததென்றும்,ஆரம்ப நாட்களில் சந்தேகமும், தனிமையும், கன்னிமடத்தின்
சௌகர்யத்திற்குத் திரும்பும் சலனமும் ஏற்பட்டதென்றும் தனது நாட்குறிப்பில்
எழுதினார். “
Our Lord wants me to be a free nun covered with the
poverty of the cross. Today I learned a good lesson. The poverty of the
poor must be so hard for them. While looking for a home I walked and
walked till my arms and legs ached. I thought how much they must ache in
body and soul, looking for a home, food and health. Then the comfort of
Loreto [her former order] came to tempt me. 'You have only to say the
word and all that will be yours again,' the Tempter kept on saying ...
Of free choice, my God, and out of love for you, I desire to remain and
do whatever be your Holy will in my regard. I did not let a single tear
come.
[22] ”1950 அக்டோபர் 7 ஆம் தேதி, மிஷினரீஸ் ஆப் சேரிட்டியாக
பிற்காலத்தில் உருவெடுக்கப் போகும் பங்குக் குழுமத்தைத் துவக்க
தெரெசாவுக்கு வாடிகனின் அனுமதி கிடைத்தது.
[23] அதன் கடமையாக அவர்
கூறியது, "உண்ண உணவற்றவர்கள், உடுத்த உடையற்றவர்கள், வீடற்றவர்கள்,
முடமானவர்கள், குருடர்கள், தொழு நோயாளிகள் போன்றோர்களையும், தங்களை
சமூகத்திற்கே தேவையற்றவர்களெனவும், அன்பு செய்யப்படாதவர்களெனவும்,
கவனிக்கப் படாதவர்க ளெனவும் எண்ணிக்கொண்டிருப்பவர்களையும், சமூகத்திற்கே
பெரும் பாரமென்று எண்ணப்பட்டு அனைவராலும் புறக்கணிக்கப் பட்டவர்களையும்
கவனித்தலே ஆகும்." கல்கத்தாவில் 13 உறுப்பினர்களையே கொண்ட சிறியதொரு
அமைப்பாக ஆரம்பிக்கப்பட்டது இது. இன்று 4000,௦௦௦க்கும் மேலான
அருட்சகோதிரிகளால் நடத்தப்படும் அனாதை இல்லங்களையும், எய்ட்ஸ் நல்வாழ்வு
மையங்களையும், தர்ம ஸ்தாபனங்களையும் தன்னகத்தே கொண்டு அகதிகள், குருடர்,
ஊனமுற்றோர், முதியோர், மது அடிமைகள், ஏழை எளியோர், வீடற்றோர்,
வெள்ளத்தினாலும், தொற்றுநோயாலும் பஞ்சத்தாலும் பாதிக்கப்பட்டவர்கள்
போன்றவர்களுக்காக பரிதவிப்பதாய் இருக்கிறது.
[24]1952 இல் கல்கத்தா
நகரத்தால் ஒதுக்கப்பட்ட இடத்தில் அன்னை தெரேசா இறப்பின்
வாயிலிலிருப்போருக்கு, முதல் இல்லத்தை ஏற்படுத்தினார். இந்திய அதிகாரிகளின்
துணை கொண்டு அவர் புழக்கமற்ற ஒரு இந்து கோயிலை ஏழைகளுக்கான நல்வாழ்வு
மையமாக மாற்றி, அதற்கு இறப்பின் வாயிலிலிருப்போருக்கான காளிகாட் இல்லம் (தி
காளிகாட் ஹோம் பார் தி டையிங்) என்று பெயரிட்டார். பின்னர் அதனை சுத்த
இதயமுடையோர்களின் காளிகாட் இல்லம் என்று மாற்று பெயரிட்டு
அழைத்தார்(காளிகாட்,தி ஹோம் ஆப் தி பியூர் ஹார்ட்-நிர்மல் ஹ்ரிதை)
[25].
இவ்வில்லத்திற்கு கொண்டு வரப்படுபவர்கள் மருத்துவக் கவனிப்பு கிடைக்கப்
பெற்றவர்களாயும், அவர்கள் சார்ந்துள்ள மதச்சடங்குகளுடன் கூடிய கௌரவமான
மரணத்தையடையும் வாய்ப்பைப் பெற்றவர்களையும் இருந்தனர். இஸ்லாமியர்களுக்கு
திருக்குர்ஆனும், இந்துக்களுக்கு கங்கைஜலமும், கத்தோலிக்கர்களுக்கு இறுதிச்
சடங்குகளும் கிடைத்தன.

[26] "அழகியதொரு மரணம் என்பது விலங்குகளைப் போல்
வாழ்ந்து கொண்டிருந்த மனிதர்கள் அன்புக்காட்பட்ட, பிறரால் வேண்டப்பட்ட
தேவதூதர்களைப் போன்ற உணர்வைப் பெற்றபின் மரிப்பது." என்பதே அவரது
கூற்றாகும்.
[26] அன்னை தெரேசா விரைவில் ஹேன்சன்'ஸ் டிசீஸ் எனப்படும்
தொழுநோயால் அவதிப்படுபவர்களுக்குரிய நலவாழ்வு மையமான ஷாந்தி
நகரைத்(சமாதானத்தின் நகரம்) துவக்கினார்.
[27]தி மிஷினரீஸ் ஆப் சேரிட்டி
கல்கத்தா முழுவதும் மேலும் பல தொழுநோய்க் கூர்நோக்கு மருந்தகங்களைத்
தோற்றுவித்து, அவற்றின்மூலம் மருந்துபொருட்கள், காயங்களைக் கட்டும்
துணிகளையும், உணவையும் விநியோகித்து வந்தது. மிஷினரீஸ் ஆப் சேரிட்டி
தொலைந்து போன குழந்தைகளைப் பெருமளவில் ஏற்றுக்கொள்கையில், அக்
குழந்தைகளுக்கென ஒரு இல்லத்தை அமைப்பதற்கான அவசியத்தை அன்னைதெரேசா உணரப்
பெற்றார்.1955 இல் அவர் நிர்மலா சிசு பவனையும், தி சில்ட்ரென்'ஸ் ஹோம் ஆப்
தி இமாக்குலேட் ஹார்ட்டையும் அனாதைக் குழந்தைகளுக்காகவும், வீடற்ற
இளைஞர்களுக்காகவும் தொடங்கினார்.
[28]இவ்வமைப்பு விரைவிலேயே புது
பணியாளர்களையும், தர்மத்திற்கான நன்கொடைகளையும், ஈர்க்கத் தொடங்கி 1960
களில் நல்வாழ்வுமையங்களையும், அநாதை இல்லங்களையும், தொழுநோயாளிகள்
தங்குமிடங்களையும் இந்தியா முழுவதும் ஆரம்பித்தது. அன்னை தெரேசா பின்னர்
இதனை உலகம் முழுவதும் விஸ்தரித்தார். இந்தியாவுக்கு வெளியே இவ்வமைப்புக்கான
முதல் இல்லம் 1995 இல் வெனிஸுயெலா நாட்டில் ஐந்து அருட்சகோதரிகளைக் கொண்டு
ஆரம்பிக்கப்பட்டது.
[29] அதனைத்தொடர்ந்து 1968 இல் ரோமிலும்,
தான்சானியாவிலும், ஆஸ்திரியாவிலும் தொடங்கப்பட்டது. 1970 களில் இவ்வமைப்பு
ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த கணக்கற்ற
நாடுகளில் இல்லங்களையும், தர்ம ஸ்தாபனங்களையும் நிறுவியது.
[30] அவரது
தத்துவமும், அமலாக்கும் விதமும் சிலரது விமர்சனத்திற்குள்ளாயின. அன்னை
தெரேசாவை விமர்சித்தவர்கள் அவருக்கெதிராகக் காட்டுவதற்கு எள்ளளவேனும்
ஆதாரம் இல்லை என்றுக் கூறும்போதே டேவிட் ஸ்காட் அன்னை தெரேசா வறுமையை
அடியோடு ஒழிக்க முனையாமல், மக்களை உயிர்வாழ வைப்பதோடு தன் சேவையை
நிறுத்திக் கொண்டார் எனக் கூறுகிறார்.

[31]வேதனையைப் பற்றிய அவரது
கருத்துக்களைக் குறித்தும் அவர் விமர்சனத்திர்க்குள்ளானார். ஆல்பெர்டா
ரிபோர்டின் ஆய்வுக்கட்டுரையின்படி வேதனைக்குள்ளாவது மக்களை இறை
இயேசுவுக்கருகில் கொணரும் என்று அவர் நினைத்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

[32] இறப்பின் வாயிலிலிருப்போருக்கான இல்லங்களில், நோய் முற்றிய
நிலையிலிருக்கும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் கவனிப்பின் தரம், தி லேன்சட்
,தி பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் போன்ற மருத்துவ பத்திரிகைகளின்
விமர்சனத்துக்குள்ளானது. இவை தோலடி ஊசிகளின் மறு உபயோகத்தையும், அடிப்படை
வசதிகளின்மையையும், குளிர்ந்த நீர் குளியலை அனைத்து நோயாளிகளுக்கும்
பிரயோகிப்பதையும், முறையான நோய்க் கண்டறிதலைத் தடுக்கும் நடைமுறைக்கொவ்வாத
அணுகுமுறையையும் குறைகூறின.

[33]1963 இல் மிஷினரீஸ் ஆப் சேரிட்டி
சகோதரர்கள் என்ற அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. 1976 இல் அருட்சகோதரிகளின்
தியானக் கிளை தோற்றுவிக்கப்பட்டது. சாமான்ய கத்தோலிக்கர்களும்,
கத்தோலிக்கர் அல்லாதவர்களும், அன்னை தெரேசாவின் சக ஊழியர்களாகவும்,
நோய்வாய்ப்பட்ட அல்லது வேதனைப்படுகிற சக ஊழியர்களாகவும், சாமான்ய மிஷினரீஸ்
ஆப் சேரிட்டிகளாகவும் பதிவு செய்யப்பட்டனர்.பாதிரியார்கள் பலரின்
கோரிக்கைகளை ஏற்று 1981 -ல், பாதிரியார்களுக்கான கார்பஸ் கிறிஸ்டி
இயக்கத்தையும்,

[34] 1984 -ல், தந்தை ஜோசப் லாங்போர்டுடன் இணைந்து தி
மிஷினரீஸ் ஆப் சேரிட்டி பாதர்ஸ்

[35]என்ற அமைப்பையும் தொடங்கினார். இதன்
நோக்கம் மிஷினரீஸ் ஆப் சேரிட்டியின் அலுவல்குறிக்கோள்களை,
பாதிரியார்த்துவத்துக்கு கீழ்பட்ட ஆதாரங்களோடு இணைப்பது. 2007 க்குள்
மிஷினரீஸ் ஆப் சேரிட்டி ஏறத்தாழ 450 அருட் சகோதரர்களையும், 120 நாடுகளில்
600௦௦ சேவை மையங்கள், பள்ளிகள் மற்றும் தங்குமிடங்களை இயக்கிக்
கொண்டிருக்கும் 5000 ௦௦௦ அருட்சகோதரிகளையும், கொண்டிருந்தது.
[36][தொகு]அயல்நாட்டு தர்ம நிகழ்வுகள். 1982 இல் பெய்ரூட்டின் கடும்
முற்றுகையைத் தொடர்ந்து, அன்னை தெரேசா இஸ்ராயேல படைகளுக்கும் பாலஸ்தீன
கொரில்லாகளுக்கும் இடையே ஒரு தற்காலிகப் போர்நிறுத்தத்தை மத்தியஸ்தம்
செய்து முன்னோடித் தாக்குதலுக்குள்ளான ஒரு மருத்துவமனையினுள் சிக்கிக்
கொண்டிருந்த 37 குழந்தைகளை மீட்டார்.
[37] செஞ்சிலுவை சங்கத்தாருடன்
சேர்ந்து யுத்த பகுதியினூடே பாழ்படுத்தப்பட்ட மருத்துவமனைக்குச் சென்று
இளம் நோயாளிகளை வெளியேற்றினார்.
[38]1980 களின் இறுதியில் கிழக்கு
ஐரோப்பாவின் அதீத வரவேற்புக்குப் பின் ஆரம்பத்தில் மிஷினரீஸ் ஆப்
சேரிட்டியை உதாசீனப்படுத்திய கம்யுனிச நாடுகளில் பல திட்டங்களை வகுத்து
தனது முயற்சிகளை விஸ்தரித்தார். கருக்கலைப்பு மற்றும் விவாகரத்துக்கு
எதிரான அவரது உறுதியான நிலைப்பாட்டின் மீதான விமர்சனங்கள் அவரை
பாதிக்கவில்லை. "யார் என்ன சொன்னாலும் சரி, நீங்கள் அதைப் புன்னகையுடன்
ஏற்றுக் கொண்டு உங்கள் வேலையைச் செய்தாக வேண்டும். அன்னை தெரேசா
எத்தியோப்பியாவின் பசித்தோருக்கும், செர்னோபிலின் அணுக்கதிர்களின்
தாக்கத்துக்காளானவர்களுக்கும், அர்மீனியாவின் பூகம்பத்தால்
பாதிக்கப்பட்டோருக்கும், உதவி செய்யவும் ஊழியஞ்செய்யவும் பயணித்தார்.
[39][40][41] 1991-ல், முதன்முறையாகத் தனது பூர்வீகத்தை வந்தடைந்த அவர்
அல்பேனியாவின் டிரானாவில் மிஷினரீஸ் ஆப் சேரிட்டி அருட்சகோதரர்கள்
இல்லத்தைத் தொடங்கினார். 1996 க்குள் அவர் ஏறத்தாழ 100 நாடுகளில் 517
தொண்டு நிறுவனங்களை நடத்திவந்தார்.
[42] நாளடைவில் ஏழைஎளியோருக்குத்
தொண்டாற்றும் அன்னை தெரேசாவின் மிஷினரீஸ் ஆப் சேரிட்டி வெறும் பன்னிரண்டு
மையங்களிலிருந்து, உலகம் முழுவதும் 450 நாடுகளில் ஆயிரக்கணக்கான மையங்களாக
வளர்ந்தது. அமெரிக்காவின் முதல் மிஷினரீஸ் ஆப் சேரிட்டி தெற்கு
பிராங்க்ஸிலும், நியுயார்க்கிலும் நிறுவப்பட்டது. 1984 க்குள் இவ்வமைப்பு
நாடு முழுவதும் 19 மையங்களை இயக்கியது.
[43]அவர் நன்கொடை பணத்தை
செலவழிக்கும் விதம் சிலரது விமர்சனத்துக்குள்ளானது. கிறிஸ்டோபர் ஹிச்சென்ஸ்
மற்றும் ஜெர்மானிய சஞ்சிகையான, ஸ்டேர்ன் போன்றவை அன்னை தெரேசா
நன்கொடைப்பணத்தை வறுமையை ஒழிப்பதற்கும், தனது நல்வாழ்வு மையங்களின்
நிலைமையை உயர்த்துவதற்கும் பயன்படுத்த எண்ணாமல், புதிய கன்னியர் மடங்களைத்
திறப்பதிலும் மதப்பிரசாரத்திற்கும் மட்டுமே பயன்படுத்தியதாகக்
கூறியுள்ளனர்.

[44]மேலும் அன்னை தெரேசாவால் ஏற்கப்பட்ட சில நன்கொடைகள்
வந்த விதமும் விமர்சனத்துக்குள்ளாயின. ஹைதியின் எதேச்சாதிகார, நேர்மையற்ற
டியுவேலியேர் குடும்பத்தில் இருந்து நன்கொடைகளைப் பெற்றுக் கொண்டு
வெளிப்படையாக அவர்களைப் புகழ்ந்திருக்கிறார். கீட்டிங் பைவ் ஊழல்
என்றழைக்கப்பட்ட ஏமாற்று சுரண்டல் திட்டத்தோடுத் தொடர்புடைய சார்லஸ்
கீட்டிங்கிடமிருந்து 1.4 மில்லியன் டாலர்களைப் பெற்றுக் கொண்டு அவர்
கைதாவதற்கு முன்னும் பின்னும் அவரை ஆதரித்தவர் அன்னை தெரேசா. லாஸ்
ஏஞ்சல்ஸின் [[மாவட்ட துணை வழக்கறிஞர் பால் டர்லி, கீட்டிங்கால் திருடப்பட்ட
ஏழை தச்சனொருவனைப் போன்றோரின் பணத்தை, தெரேசா அவரிடமிருந்து நன்கொடையாகப்
பெற்ற பணத்தை வைத்து திரும்பக் கொடுக்கக் கோரி எழுதினார். நன்கொடைப் பணம்
என்னவாயிற்று என்றும் தெரியவில்லை, டர்லிக்கு எந்தவித பதிலும்
கிடைக்கவில்லை.
[45]கோலெட் லிவர்மூர் எனும் முன்னாள் மிஷினரீஸ் ஆப்
சேரிட்டி உறுப்பினர் அவ்வமைப்பை விட்டுத் தான் வெளியேறியதற்கான காரணங்களை
அவரது புத்தகமான ஹோப் என்ட்யுர்ஸ்: லீவிங் மதர் தெரேசா, லூஸிங் பெய்த்
அண்ட் ஸெர்ச்சிங் பார் மீனிங் என்ற புத்தகத்தில் விளக்கியுள்ளார். அன்னை
தெரேசா சிறந்த தைரியமானவராக இருந்தபோதிலும், அவரது துன்பத்தின் சாஸ்திரம்
ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என்று லிவர்மோர் எண்ணினார்.மதபோதனைகளை விட
செயல்கள் மூலம் நற்செய்தியைப் பரப்புதலின் முக்கியத்துவத்தை அன்னை தெரேசா
அவரது சீடர்களுக்கு தெளிவுபடுத்தியிருந்தபோதிலும், அந் நிறுவனத்தின் சில
நடைமுறைகளுடன் தான் ஒத்துப்போக முடியவில்லை என்று லிவர்மூர்
கூறுகிறார்.அதற்கு அவர் கூறும் எடுத்துக்காட்டுகளாவன, நியமிக்கப்பட்ட கால
அட்டவணைக்கு மாறாக உதவி வேண்டுபவர்கள் அருட்சகோதரிகளை அணுகும்போது, உதவி
செய்ய மறுத்தல், அவர்கள் சந்திக்கிற வியாதிகளை போக்குவதற்குத் தேவையான
மருத்துவ பயிற்சிகளை அருட்சகோதரிகள் நாடுவதைத் தடைசெய்வது (ஆண்டவர்
பெலவீனர்களையும் அறிவிலிகளையும் பலப்படுத்துகிறார் எனக் கூறிக் கொண்டு),
மற்றும் நண்பர்களை விட்டு தொலைவில் தரப்படுகிற இடமாற்றம் போன்ற நியாயமற்ற
தண்டனைகள் வழங்குவது. மதச்சார்பற்ற புத்தகங்கள் மற்றும் பத்திரிகைகளைப்
படிப்பதிலிருந்து தடைசெய்வதன்மூலமும், சுதந்திரமான எண்ணங்கள் மற்றும்
பிரச்சினைகளை சமாளிக்கும் திறன் ஆகியவற்றை பொருட்படுத்தாத கீழ்படிதலை
வலியுறுத்துவதன் மூலமும், மிஷினரீஸ் ஆப் சேரிட்டி அதன் அருட்சகோதரிகளை
குழந்தைகளைப் போல் மாற்றி விட்டது என்கிறார் லிவர்மூர்.
[46][தொகு]ஆரோக்கியக் குறைபாடும் மரணமும் 1983-ல் போப் இரண்டாம் ஜான் பாலை
ரோமையில் சந்தித்த பொழுது அன்னை தெரெசாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
1989-ல் இரண்டாவது முறையாக ஏற்பட்ட மாரடைப்புக்குப் பிறகு அவருக்கு செயற்கை
துடிப்புமூலம் பொருத்தப்பட்டது. 1991-ல் மெக்சிகோவில், நிமோனியாவுடனான
போராட்டத்திற்குப் பிறகு அவர் மீண்டும் இதயக் கோளாறுகளால்
அவதிப்பட்டார்.மிஷினரீஸ் ஆப் சேரிட்டியின் தலைமைப் பொறுப்பிலிருந்து
ராஜினாமா செய்ய முன்வந்தார். ஆனால் இவ்வமைப்பின் அருட்சகோதரிகள் இரகசிய
வோட்டின் மூலம் அவர் அப்பணியிலேயே தொடர்ந்திருக்க செய்தனர். அமைப்பின்
தலைவியாகத் தொடர அன்னை தெரேசா ஒப்புக்கொண்டார். ஏப்ரல் 1996-ல் அன்னை
தெரேசா கீழே விழுந்து அவரது காறை எலும்பு முறிந்தது. ஆகஸ்டில்
மலேரியாவினாலும், இதய கீழறைக் கோளாற்றினாலும் அவதிப்பட்டார்.இதய
அறுவைசிகிச்சைக்குட்பட்ட போதிலும் அவரது உடல்நிலை மோசமாகிக் கொண்டிருந்தது.
அவரைப் பற்றிய இன்னொரு விமர்சனம், நோயில் விழுந்தபொழுது தனது
மருந்தகங்களில் ஒன்றில் சிகிச்சை பெறாமல், கலிபோர்னியாவின் அனைத்து
வசதிகளுமுடைய மருத்துவமனையில் சிகிச்சை பெற முடிவு செய்தது.

[47] மார்ச்
13, 1997 ல் அவர் மிஷினரீஸ் ஆப் சேரிட்டியின் தலைமைப் பொறுப்பிலிருந்து
விடுபட்டு செப்டம்பர் 5, 1997-ல் மரணமடைந்தார். கல்கத்தாவின் ஆர்ச்பிஷப்
ஹென்றி செபாஸ்டியன் டி 'சூசா, இதய கோளாறுகளினால், அன்னை தெரேசா
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபொழுது, அவர் அலகையின் பிடியில்
இருக்கலாமெனத் தான் எண்ணிய காரணத்தால் அவரது அனுமதியோடு அவரை
மந்தரிக்கும்படி ஒரு பாதிரியாரை பணித்ததாகக் கூறியுள்ளார்.
[48]அவரது
மரணத்தின் போது, அன்னை தெரேசாவின் மிஷினரீஸ் ஆப் சேரிட்டி 123 நாடுகளின்
610 சேவை மையங்களை இயக்கி வரும் 4,000 க்கும் மேலான அருட் சகோதரிகளையும்,
[மேற்கோள் தேவை]
[61] 300 உறுப்பினர்களைக் கொண்ட சக அருட் சகோதர
அமைப்பையும் [மேற்கோள் தேவை]

[62], 10,000 த்திற்கும் மேலான சாமான்ய
தொண்டர்களையும் கொண்டிருந்தது. [மேற்கோள் தேவை] [63]இவை எச் ஐ
வி/எய்ட்ஸ், தொழுநோய், காசநோய் போன்ற நோயினால் பாதிக்கப்பட்டோருக்கான
நலவாழ்வு மையங்களையும், இல்லங்களையும்,அன்னசத்திரங்களையும், குழந்தைகள்
மற்றும் குடும்பத்தினருக்கான ஆலோசனைமையங்களையும், தனி உதவியாளர்களையும்,
அநாதைமடங்களையும், பள்ளிகளையும் உள்ளடக்கியது. [தொகு]உலக அங்கீகாரமும்
வரவேற்பும் [தொகு]இந்தியாவில் வரவேற்பு 1962 ல் பத்மஸ்ரீ விருது
வழங்கப்படுவதற்கு கால் நூற்றாண்டுக்கு முன்பே இந்திய அரசால் அன்னை தெரேசா
அடையாளங்காணப்பட்டுள்ளார். 1972-ல், பன்னாட்டு புரிந்துணர்வுக்கான
ஜவகர்லால்நேரு விருது, 1980-ல் இந்தியாவின் உயரிய குடிமக்கள் விருதான பாரத
ரத்னா உட்பட பிரதான இந்திய உயர்விருதுகளை அடுத்ததடுத்த பத்தாண்டுகளில்
பெற்று வந்தார்.
[49]அவரது அதிகாரபூர்வ வாழ்க்கைச்சரித்திரம், இந்திய
ஆட்சிப் பணியாளரான நவீன் சாவ்லாவால் எழுதப்பட்டு 1992 ல் வெளியிடப்பட்டது.
[50]அன்னை தெரசாவைப் பற்றிய இந்தியாவின் கருத்துகள் ஒரே சீராக
சாதகமானவைகள் அல்ல. கல்கத்தாவில் பிறந்து வளர்ந்து லண்டனில் வாழ்ந்து
கொண்டிருக்கும் அவரது விமர்சகரான அரூப் ச்சேட்டர்ஜி அவர் வாழ்ந்த காலத்தில்
கல்கத்தாவின் முக்கிய அங்கமாக இருக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
அன்னை தெரேசா தனது சொந்த ஊரான கல்கத்தாவின் புகழைக் குலைத்து விட்டதாகக்
குறை கூறுகிறார் அரூப் ச்சேட்டர்ஜி

[51] இந்துக்களின் உரிமையை
அவ்வப்போது எதிர்த்து வந்ததால், அவரது சமூகமும், ரூபமும் இந்திய அரசியல்
சமுதாயத்தில் எரிச்சலை உண்டுபண்ணின. பாரதிய ஜனதா கட்சி கிறிஸ்துவ
தலித்துக்கள் விஷயத்தில், அவரோடு மோதிய போதிலும், அவரது மரணத்தின் போது
அவரைப் புகழ்ந்து, இறுதி சடங்கிற்குத் தனது பிரதிநிதியை அனுப்பியது. ஆனால்
விஸ்வ இந்து பரிஷத்தோ, அரசு மரியாதையுடன் கூடிய உடல் தகனம் செய்யும்
அரசாங்கத்தின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தது.அதன் நிர்வாகி கிரிராஜ்
கிஷோர், "அவரது முதல் கடமை கிறிஸ்துவத்திற்கே இருந்தது" என்றுக் கூறினார் .
பொது நல சேவை தற்செயலானது. மேலும் அவர் கிறிஸ்துவர்களுக்கு
சாதகமானவரென்றும், இறப்பின் வாயிலிலிருப்போருக்கு இரகசிய ஞானஸ்நானங்கள்
மேற்கொள்ளுபவரென்றும் குற்றஞ்சாட்டினார். ஆனால் ப்ரண்ட் லைன்
பத்திரிகையளித்த முதல் பக்கமரியாதையில் இக்குற்றச்சாட்டுகளை அப்பட்டமான
தவறாக நிராகரித்துள்ளது. அவரது சேவையைப் பற்றிய மக்களின் கல்கத்தாவாசிகளின்
எண்ணத்தில், எந்த தாக்கத்தையும் இவை விளைவித்துவிடவில்லை என்றும்
கூறியிருக்கிறது. இப்புகழ்மாலையை சூட்டிய ஆசிரியர் அவரது தன்னலமற்ற சேவை
செய்யும் சக்தியையும், தைரியத்தையும் புகழ்ந்தபோதிலும், பொது கூட்டங்களில்
அவர் கருக்கலைப்பை எதிர்ப்பதையும், அதை அரசியல் நோக்கமில்லாததாகக்
காட்டிக்கொள்வதையும் குறை கூறியுள்ளார்.
[49] அண்மையில், இந்திய நாளேடான
தி டெலிக்ராப் அவர் வறியவர்களின் துன்பத்தைப் போக்க ஏதேனும் செய்தாரா
அல்லது உணர்வுபூர்வமாக நெறிகளைத் தூண்டும் நோக்கத்தோடு, நோயாளிகளையும்
இறப்போரையும் பராமரித்து வந்தாடு நின்று விட்டாரா என்பதைக் குறித்து
விசாரிக்கும்படி ரோமைக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது என்று
கூறியுள்ளது.
[52]செப்டம்பர் 1997 ல் இறுதிச்சடங்கிற்கு முன்னதாக ஒரு வார
காலம் அன்னை தெரேசாவின் உடல் கொல்கத்தாவின் புனித தோமையார் ஆலயத்தில்
பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. அனைத்து மத ஏழைகளுக்கும் அவர்
ஆற்றிய தொண்டுக்குப் பரிகாரமாக, இந்திய அரசின் ராணுவ மரியாதையுடன் கூடிய
உடல் தகனம் செய்யப்பட்டது.
[53] [தொகு]ஏனைய உலக நாடுகளில் வரவேற்பு
அமெரிக்க ஜனாதிபதி ரோனல்ட் ரீகன் அன்னை தெரெசாவுக்கு சுதந்தரத்துக்கான
அதிபரின் பதக்கத்தை 1985 ல் வெள்ளை மாளிகையில் நடந்த விழாவில் வழங்கி
கௌரவித்தார். தெற்காசிய மற்றும் கிழக்காசிய சேவைகளுக்காக 1962-ல்,
பன்னாட்டுப் புரிந்துணர்தலுக்கான பிலிப்பைன்ஸின் ரமோன் மேக்சேசே விருதைப்
பெற்றார். அயல்நாடுகளில் தாழ்த்தப்பட்ட ஏழைகளின் மீதான கருணை நிறைந்த
கவனத்தையும், அதற்காகவே அவர் வழிநடத்திச் செல்லும் புதிய சபையையும்
இவ்விருதின் தர்மகர்த்தாக்களின் குழுமம் அங்கீகரிக்கிறது என்று விருதில்
குறிப்பிடப்பட்டிருந்தது.

[54] 1970 களின் தொடக்கத்திற்குள் அன்னை தெரேசா
அனைத்துலக பிரபலமானார். 1969 ன் விளக்கப்படமான மேல்கம் முக்கேரிட்ஜ்-ன்,
சம்திங்க் பியுடிபுல் பார் காட் -ம், அதே தலைப்புடைய அவரது புத்தகமும்
அவரது புகழுக்கு வித்திட்டவைகளில் முக்கியமானவை ஆகும். முக்கேரிட்ஜ்
அந்நேரத்தில் ஒரு ஆன்மீக பயணத்தில் ஆழ்ந்திருந்தார்.
[55]
அச்செய்திப்படத்தின் படப்பிடிப்பின் போது மோசமான ஒளியமைப்பு சூழ்நிலையில்,
குறிப்பாக இறப்பின் வாயிலிலிருப்போருக்கான இல்லங்களில் எடுக்கப்பட்ட
காட்சிகள் படப்பிடிப்புக் குழுவினரின் உபயோகத்திற்கு ஏற்றதாக இல்லை. ஆனால்
இந்தியாவிலிருந்து திரும்பிய பின்னர் அக கட்சிதொகுப்பு மிக நல்ல
ஒளியமைப்புடன் வந்திருந்தது. அன்னை தெரேசாவிடமிருந்தே வந்த தெய்வீக
ஒளியர்ப்புதம் இது என முக்கேரிட்ஜ் பறைசாற்றினார்.

[56] அப்படப்பிடிப்புக்
குழுவின் மற்றவர்கள் அது புதுவித அதிநுண்ணிய வகை கோடாக் படச்சுருளால்
ஏற்பட்ட விளைவே என்றெண்ணினர்.
[57] முக்கேரிட்ஜ் பின்னர் கத்தோலிக்கராக
மாறி விட்டார். இவ்வேளையில் கத்தோலிக்க உலகம் முழுவதும் அன்னை தெரேசாவைப்
பகிரங்கமாகப் புகழ ஆரம்பித்தனர். 1971-ல் அருட் தந்தை ஆறாம் சின்னப்பர்,
சமாதானத்துக்கான முதல் அருட் தந்தை 23 ம் அருளப்பர் பரிசை, அவரது ஏழை
எளியோர் சேவையையும் கிறிஸ்துவ தர்ம பறைசாற்றலையும், சமாதான முயற்சியையும்
பாராட்டி அவருக்கு அளித்தார்.

[58] அதன் பிறகு பேசெம் இன் டெர்ரிஸ்
விருதைப் பெற்றார்.
[59] தான் மரித்தநாளிலிருந்து அன்னை தெரேசா
புனிதத்துவத்தினை நோக்கி வேகமாக முன்னேறி தற்பொழுது முக்தி பேறினை
எட்டியிருக்கிறார். அன்னை தெரேசா அரசாங்கங்களாலும், மக்கள் அமைப்புகளாலும்
பெருமைப்படுத்தப்பட்டிருக்கிறார். ஆஸ்திரேலிய சமுதாயத்திற்கு மட்டுமல்லாது
ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் செய்த சேவைக்காக, 1982-ல் அவர் ஆர்டர் ஆஃப்
ஆஸ்திரேலியாவின் கௌரவ தோழர் என்ற விருதைப் பெற்றார்.
[60] இங்கிலாந்தும்,
அமெரிக்காவும் அடுத்தடுத்து விருதுகள் வழங்கிய பின் 1983-ல்,
இங்கிலாந்தின் ஆர்டர் அப் மெரிட் என்ற விருதும், நவம்பர் 16 1996 ல்,
அமெரிக்காவின் கௌரவக் குடியுரிமையும் கிடைத்தன. அன்னை தெரேசாவின்
பூர்விகமான அல்பேனிய நாடு அவருக்கு 1994 ஆம் ஆண்டு தேசத்தின் தங்க
மரியாதையை அளித்து கௌரவப்படுத்தியதோடல்லாமல் [49] 1991-ல் குடியுரிமையும்
அளித்திருந்தது.
[61] இதையும் ஹைதி அரசளித்த இன்னொரு விருதையும் அவர்
ஏற்றுக்கொண்டது விமர்சனத்துக்குள்ளானது. அன்னை தெரேசா டியுவேலியர்களையும்,
சுரண்டலுக்குப் பேர் போன தொழிலதிபர்களான சார்லஸ் கீட்டிங் மற்றும் ராபர்ட்
மேக்ஸ்வல் போன்றோர்களையும் ஆதரித்ததால் இடதுசாரிகள் உட்பட அனைவரின்
விமர்சனத்துக்கும் உள்ளானார். கீட்டிங்கின் விவகாரத்தில் அவ்வழக்கின்
நீதிபதியிடம் இரக்கத்தைக் காட்ட வலியுறுத்தி எழுதினார். [33]
[49]
மேற்க்கத்திய நாடுகளின் பல்கலைக்கழகங்களும் இந்திய பல்கலைக்கழகங்களும்
அவருக்கு கௌரவப் பட்டங்களை அளித்தன.
[49] ஏனைய குடிமக்கள் விருதுகளாவன,
மனிதநேயம், சமாதானம் மற்றும் சகோதரத்துவ விருத்திக்காக பல்சான் விருது
(1978),
[62]மற்றும் ஆல்பெர்ட் ஷ்வேய்த்சர் அனைத்துலக விருது ஆகியன.
[63]1979 ல், அன்னை தெரேசா சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்றார்.
சமாதானத்தின் அச்சுறுத்தல்களாக விளங்கும், ஏழ்மையையும், துயரத்தையும்
வீழ்த்தும் போராட்டத்தில் பங்கேற்றமைக்காக அவ்விருது வழங்கப்பட்டதாக
அறிவிக்கப்பட்டது. பிரசித்தி பெற்ற நோபல் பரிசு பெறுபவர்களுக்கு
அளிக்கப்படும் பாரம்பரிய விழா விருந்தை மறுத்த அவர் அதற்காகும் $192,000
நிதியை இந்தியாவின் ஏழைகளுக்கு கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.
[64]
அதற்கு அவர் கொடுத்த காரணம் இவ்வுலக விருதுகள் உலகத்தின் ஏழைகளுக்கு
யாரென்று தெரியாது - நீ...
இணையதளம் இணைத்த இணைப்பு...
மன்னிக்கவும்...
இனிப்பு...
உனக்கும் எனக்கும் ஒரு வித்யாசம்...
நிஜங்கள் எனக்கு கை கொடுப்பதில்லை...
கனவுகள் உனக்கு கை கொடுப்பதில்லை...
இருந்தும்,
நம்பிக்கையின் பாதையில்,
ஊர்ந்து கொண்டிருக்கிறோம்...
வெற்றி தொலைவல்ல தோழியே...
சில உறவுகளுக்கு அர்த்தங்கள் இல்லை...
நீ இல்லையேல், வாழ்வில் அர்த்தம் இல்லை...
இந்த வார்த்தைகள்,
நேரம் தாழ்ந்தாலும்,
நேசம் தாழாது...
என் வெற்றியில் உன் பங்கிருக்கும்...
உன் வெற்றியில்,
நிச்சயம் என் பங்கிருக்கும்...
நேரில் பார்க்காவிட்டாலும்...
நேரம் கிறுக்கி விட்டது..
நம் நட்பை...
கிறுக்களும் காவியமாகிவிட்டது...
இது அதிசயம்...
என்றும் உன் அருகில் இருப்பேனா என்பது எனக்கு தெரியாது..
ஆனால்...
ஓடி..கலைத்து வா...
நட்பென்னும் நிழலை கொண்டு நான் நின்றிருப்பேன்...
தோழியே...
உனக்காக...