ஞானச்சுடர்

   உன்மேல் நம்பிக்கை வை
மாபெரும் வலிமையை உணர்வாய்
  இறைவன்மேல் நம்பிக்கை வை
அனைத்து துன்பங்களையும் வெல்வாய்
   குருவின்மேல் நம்பிக்கை வை
உனக்குள் உள்ள அனைத்து சக்திகளையும் உணர்வாய்
வாழ்க்கையில் துணிவுடனும் விவேகத்துடன் செயற்படு
  அனைத்து வெற்றியும் பெறுவாய்
ஆன்மீக வழியில் அன்புடனும் உறுதியுடனும் பொறுமையுடனும்
  அசையா மனதுடனும் சென்றால்
ஞானத்தை உணர்ந்து இன்பத்தை காண்பாய்


belief in your self and you will realize immense strength
belief in GOD and you shall over come all sorrow
belife in CURU and you shall realize all the powers with in you
face LIFE energetically and wisely this will bring you success
if you proceed in to spiritual life with LOVE determintion
              patience and a firm mind
      you will obtain jinana and realize JOY

அம்மா

வெறுமையாய் த‌னிமைக்குள்
சுழ‌ல்கின்ற‌ ப‌ய‌ண‌ம்
அமைதிக்குள் தொலைந்துவிட‌
நினைக்கின்ற‌ ம‌ன‌ம்
இவைக‌ளை இய‌ல்பாய்
இணைக்கின்ற‌ கோடாய்
நின் புன்ன‌கையின் சாய‌ல்
நினைவுக‌ளில்-அன்னையே.
வாழ்க்கைப் பாதையில்
வலிமிகும் பொழுதுகளில்
ஏக்கங்கள் எழுந்து
எரிக்கின்ற வேளைகளில்
உணர்வுகள் உடைந்து
உயிர்சுடும் கணங்களில்
தாங்க முடியாமல்
தவிக்கும் தருணங்களில்
உணர்வற்ற ஜடமாய்
வார்த்தைகள் வடிந்து
வலியோடு வருமொரு
முனகல் ’அம்மா’
மெல்ல வலிகுறைந்து
கண்ணில் நீர் நிறைந்து
ஏக்கப் பெருமூச்சொன்று
எழுந்து அடங்கிவிட
மீண்டும் முன்புபோல்
முட்டி மோதியேனும்
முன்னேற வைக்கும்
உன்னத உணர்வு - அம்மா