ஷ்.....ஷ்.....ஷ்.....உறங்கி விடு

சத்தம்


நிறுத்தி விடு

யுத்தம்

ஓயவில்லை

பித்தம்

பிடித்தவர்கள்

சித்தம்

தெழிந்தவுடன்

இரத்தம

சிந்தாத

புத்தம் புது

ஆண்டில்

நித்தம்

புது மலராய்

முத்தம்

நான் தருவேன்....

மொத்தம் இழந்த நீ

குத்தம் சொல்லாதே

மெத்தைக் கல்லறையில்

வத்தாய் உறங்கி விடு

ஷ்.....ஷ்......ஷ்......

அம்மா எந்தன் உயிர்

என்


விழிகளில் அழுதிட

இதழ்களில் சிரித்திட

இமைகளில் உறங்கிட

இம்சையை இரசித்திட

வெற்றியில் கழித்திடத்

தோல்வியில் துவண்டிட

முத்தத்தில் மகிழ்ந்திட

சித்தத்தை செதுக்கிட

உதிரத்தை துடைத்திட

உயிருடன் கலந்திட

இன்பத்தை பெருக்கிட

இன்னலைக் களைந்திட

இறைவனால் பரிசளிக்கப்பட்ட

இனிய தேவதை நீ.......

அம்மா.

உனக்கு நான் பட்ட கடனதை

எத்தனை பிறவி எடுத்தும்

தீர்க்க முடியாத நிலையில்

ஒன்று மட்டும்

உறுதி செய்கின்றேன்

உன்

உயிர்த்துளியாக கருதி

எனக்கு நீ ஆற்றியவைகளை

மறந்திடும் நாளொன்றில்

இந்த மகனுக்கு

இவ்வுலகம் வைத்திடும்

பெயர் பிணம்!!!!!!!!!
முன்னம் ஓர் நாள் முழு நிலா


வெள்ளிக் கோலம் போட. ..

முன்னால் நீயிருந்தால்

என் மனதெங்கும் மின்னல் தெறிக்க

அட......!

சில்லென்றிருந்த நீ- வான

வில்லாக மாறியதை

அல்லும் பகலும் இன்நாளில் நினைத்தாலும்

அகன்ற இதயத்தில் அழுத்தமான அனல்!

விண் நிலவுக்கு ஒரே நிறம்!

என் நிலவுக்கோ....?

வறுமைக்கு பஞ்சமில்லாத நம்

வள நாட்டில்-காதல்

வரிகளுக்கும் பஞ்சமில்லைதான்

அந்த வரிகளின் வரிசையில்

குப்பைகளும் ஏராளம்!

கோபுரங்களும் தாராளம்!

பிறகேன் நானுமிங்கு கூடுதல்

வரிகளை விதிக்கின்றேன்?

பதுமராகத்தில் ஒலிக்கீற்று

உதயமாவது எப்படியென விளிப்பது போல்

இதுவும் எனக்கு

புதுமையாகவே என்றும்முள்ள புதிர்.
என்னை இந்த உலகத்திற்கு அறிமகப்படுத்தி இந்த அளவுக்கு என்னை செதுக்கி வடிவமைத்த எனது உயிரான அம்மாவுக் முதல் நன்றி
கலையரசன் பிறேம்கோபால் கலையரசி பறேமினி உணமையான உணர்வுடன் போராடி சாதனை படைத்துள்ளார்கள்


இவை அனைத்தும் அவர்களது சாதனைகளில் சிறு துளி

இந்த சிறுதளி பேராறாக மாற என்று என்னுடைய வாழ்த்துக்கள்