முன்னம் ஓர் நாள் முழு நிலா


வெள்ளிக் கோலம் போட. ..

முன்னால் நீயிருந்தால்

என் மனதெங்கும் மின்னல் தெறிக்க

அட......!

சில்லென்றிருந்த நீ- வான

வில்லாக மாறியதை

அல்லும் பகலும் இன்நாளில் நினைத்தாலும்

அகன்ற இதயத்தில் அழுத்தமான அனல்!

விண் நிலவுக்கு ஒரே நிறம்!

என் நிலவுக்கோ....?

வறுமைக்கு பஞ்சமில்லாத நம்

வள நாட்டில்-காதல்

வரிகளுக்கும் பஞ்சமில்லைதான்

அந்த வரிகளின் வரிசையில்

குப்பைகளும் ஏராளம்!

கோபுரங்களும் தாராளம்!

பிறகேன் நானுமிங்கு கூடுதல்

வரிகளை விதிக்கின்றேன்?

பதுமராகத்தில் ஒலிக்கீற்று

உதயமாவது எப்படியென விளிப்பது போல்

இதுவும் எனக்கு

புதுமையாகவே என்றும்முள்ள புதிர்.

கருத்துகள் இல்லை: