அம்மா எந்தன் உயிர்

என்


விழிகளில் அழுதிட

இதழ்களில் சிரித்திட

இமைகளில் உறங்கிட

இம்சையை இரசித்திட

வெற்றியில் கழித்திடத்

தோல்வியில் துவண்டிட

முத்தத்தில் மகிழ்ந்திட

சித்தத்தை செதுக்கிட

உதிரத்தை துடைத்திட

உயிருடன் கலந்திட

இன்பத்தை பெருக்கிட

இன்னலைக் களைந்திட

இறைவனால் பரிசளிக்கப்பட்ட

இனிய தேவதை நீ.......

அம்மா.

உனக்கு நான் பட்ட கடனதை

எத்தனை பிறவி எடுத்தும்

தீர்க்க முடியாத நிலையில்

ஒன்று மட்டும்

உறுதி செய்கின்றேன்

உன்

உயிர்த்துளியாக கருதி

எனக்கு நீ ஆற்றியவைகளை

மறந்திடும் நாளொன்றில்

இந்த மகனுக்கு

இவ்வுலகம் வைத்திடும்

பெயர் பிணம்!!!!!!!!!

கருத்துகள் இல்லை: