தேடல் எங்கும்

அங்கொன்றும் இங்கொன்றுமாய்.
நல்ல நண்பனை...
பரபரப்பில்லாத
மனதை...
இனம் புரிந்த மனைவியை...
கலவர பூமியில்
தேடல் எங்கும்.
பிரபஞ்சப்
பெருவெளியில்
ஜனனக் குரலாய்
பல திசை இரைச்சல்கள்.
அண்ட
சராசரத்தின்
சவ்வு கிழிய
நெரிசல் வாழ்க்கையின்
ஈரக்கசிவுகள்
வழிநெடுகத்
தேடல்
எங்கும்.
காய்ந்த தலையும்
வெறித்த பார்வையும்
இளமையில்
முதிர்ச்சியும்.
நம்
சந்ததியர்களுக்கு விட்டுச்
செல்வது
அமில
நீரும்...
விஷக்காற்றும்...
தேடல் எங்கும்.

கருத்துகள் இல்லை: